கூத்தமைப்புக்கு2 கோடி கிளிநொச்சி பல்கலை வளாகத்தில் ஒரு கோடிக்கு பத்தர் சிலை!

யாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு தற்போது விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

எனினும் பல்கலைக்கழக சூழலில் மத முரண்பாடுகளற்ற – நல்லிணக்கமான சூழலை ஏற்படுத்துவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் பல்கலைக்கழகத்தின் திட்ட வரைபடத்திற்கு அமைய அனைத்து மத ஆன்மீக வழிபாட்டிற்கான பகுதியில் இந்துமத ஆலயம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் என்பவற்றுக்கான பிரதிஸ்டை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா கூறினார்.

வளாகத்தில் பிள்ளையார் சிலை ஒன்றை இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது இது ஆகம முறைப்படி அவற்றை பிரதிஷ்டை செய்வதற்காகவே தடுத்து நிறுத்தியதாகவும் இந்துமத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஒரு மாத காலப் பகுதிக்குள் அனைத்து மதங்களுக்கான ஆன்மீக வழிபாட்டிடத்தின் பணிகளும் சீருக்கு வந்துவிடும் என்றும் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் பீடாதிபதி அ. அற்புதராஜா மேலும் தெரிவித்துள்ளார்.


முன்னர் இந்துக்கள் பிள்ளையாரா, சிவனா, முருகன் கோவிலா என்ற இழுபறி காணப்பட்டது. கிட்டத்தட்ட தற்போதே பிள்ளையார் கோவில் அமைக்க பெரும்பான்மையான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மத ஸ்தலம் கத்தோலிக்க முறையிலா, அல்லாத முறையிலா என்ற நிலைப்பாடு காணப்பட்டது. ஆலயம் பொதுவான வழிபாட்டுக்கு அமைப்பதாகவும் வழிபாட்டினை வெவ்வேறு நேரங்களில் நடத்தலாம் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.