செல்போனில் சார்ஜ் நீடிக்க வேண்டுமா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது பேட்டரி திறன் குறைபாடு. இதற்கான புதிய வழிமுறை ஒன்றை தற்போது கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு போனின் பேட்டரி திறனை சேமிக்க விரும்புவோர் பவர் பேங்க் மற்றும் அதிவேக சார்ஜர்களின் உதவியை நாடுவது வழக்கம். ஆனால், இவை எதுவுமே இன்றி புதிய வழிமுறை ஒன்றை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் செயலி வடிவமைப்பாளர்களுக்கான ஆண்ட்ராய்டு டேவ் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கூகுள் நிறுவனம், "மொபைல் போனின் பேட்டரித் திறன் குறைவதற்கு போனில் உள்ள வெளிச்சத்தை (Brightness) தாண்டி அதன் நிறத்திற்கும் (Screen Color) முக்கிய பங்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
எனவே, ஸ்மார்ட்போன்களை நைட் மோடில் போட்டு பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு பேட்டரித் திறனை சேமிக்க முடியும் என்கிறது கூகுள் நிறுவனம். மேலும், வீடியோ ஸ்ட்ரீமிங்கில் முக்கிய தளமான யூடியூப்பை நைட்மோடில் பயன்படுத்தினால் 43 சதவிகிதம் வரை பேட்டரித் திறனை சேமிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைலில் நைட் மோடு சேவையைப் பயன்படுத்துவது எப்படி?
* மொபைலில் செட்டிங்ஸ் சென்று Display Options-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
* அதில் Select Theme-ஐ தேர்வு செய்தால் கீழ்க்காணும் மூன்று தெரிவுகள் வரும்.
* அதில் Dark-ஐ தேர்வு செய்வதன் மூலம் நைட் மோடு சேவை தொடங்கப்பட்டுவிடும்.
Powered by Blogger.