இந்தியாவில் 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம்!

இந்தியாவில் இதுவரை 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசின் உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(நவ-11) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 25 நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அவற்றின் பெயர்களை மாற்றிட ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு வங்காளம் என்பது பங்களா என்று பெயர் மாற்றப்படுகிறது. இதற்கான அனுமதி இன்னும் தரப்படவி்ல்லை.
அலகாபாத் என்பது பிராயக்ராஜ் என்றும் பைசாபாத், அயோத்தியா என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கான அனுமதி கோரும் கடிதம் இன்னும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வரவில்லை. அந்த கடிதங்கள் வந்தவுடன் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
இதுவரை ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரிக்கு ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிசாவிலுள்ள அவுட்டோர் தீவானது அப்துல் கலாம் தீவாகவும்,கேரளாவிலுள்ள அரிக்கோடு ஆரிக்கோடாகவும், ஹரியானாவிலுள்ள பிந்தாரி என்பது பாண்டு பிந்தாரியாகவும் , நாகலாந்திலுள்ள சாம்பூர் என்பது சான்பூரே என்றும் பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இது போன்று கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளிட்டு 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்திட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமம் அல்லது நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட ரயில்வேத் துறை, தபால் துறை மற்றும் இந்தியாவின் சர்வேத் துறை ஆகிய துறைகளிடமிருந்து ஒப்புதல் கேட்கப்படும். அந்த துறைகள் ஆட்சேபனை தெரிவித்தாலோ, அதே பெயரில் மற்றொரு கிராமமோ அல்லது நகரமோ இருந்தால் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.