சர்ச்சையில் ப்ரியா மணியின் 'ரீ-என்ட்ரி'!

தனது திருமணத்திற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்காமல் இருந்தவந்த நடிகை ப்ரியா மணி, தற்போது புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார்.

கவனிக்கப்படும் கதாநாயகிகளுள் ஒருவராக கோலிவுட்டில் வலம்வந்தவர் நடிகை ப்ரியா மணி. பலருக்கும் கிடைக்காத தேசிய விருதை சில படங்களில் நடித்த நிலையிலேயே தன் வசப்படுத்திய அவர், சமீப காலமாக படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் சில டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக வந்துகொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் திருமணமும் நடந்து முடிந்தது.
Add caption
திருமணத்திற்கு பிறகு கன்னடப் படத்தில் நடித்து முடித்து, மலையாளப் படத்தில் நடிக்க வந்துவிட்டாலும் தெலுங்கில் எந்தப் படத்திலுமே அவர் ரீ என்ட்ரி கொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் பிரகாஷ் ராஜுடன் இணைந்து மன ஊரி ராமாயணம் எனும் படத்தில் நடித்திருந்ததே தெலுங்கில் அவர் நடித்திருந்த கடைசிப் படம் ஆகும்.
இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக சிரிவென்னலா எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ப்ரியா மணி. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் இதை, பிரகாஷ் புலிஜலா இயக்குகிறார். சாய் தேஜஸ்வனி, பிரபாகர், அஜய் ரத்னம் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.
இன்று (நவம்பர் 12) டைம்ஸ் ஆஃப் இந்தியா மீடியாவில், இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ப்ரியா மணி கூறியதாக, வந்துள்ள செய்தியில் “சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதில் இளம் வயது பெண்ணாக நடிக்கிறேன். அமானுஷ்யங்கள் ஒருவரது வாழ்க்கையில் என்னென்னவற்றை நிகழ்த்துகிறது, அதை ஒரு கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறது எனும் விஷயங்கள் இப்படத்தில் இருக்கும்” எனக் கூறியுள்ளார் ப்ரியா மணி.
ப்ரியா மணியின் ரீ என்ட்ரி கவனத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தப் படத்திற்கு சூட்டப்பட்டுள்ள டைட்டிலால் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். காரணம் சர்வதாமன் பானர்ஜி, சுஹாசினி உள்ளிட்டோர் இணைந்து ஏற்கெனவே இதே டைட்டில் கொண்டு 1986லேயே ஒரு படம் வந்துள்ளமைதான்.
புகழ்பெற்ற பழைய படங்களின் டைட்டில்களைக் கொண்டு உருவாகும் பெருவாரியான புதிய படங்கள் முந்தைய படங்களின் புகழைக் கெடுப்பதாகவே அமைகிறது எனும் குற்றச்சாட்டு எல்லா சினிமாவிலேயும் இருந்துவருவதால் இந்த சிரிவென்னலா படமும் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

No comments

Powered by Blogger.