சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!

நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த மூத்த நீதிபதி ஹுலுவாடிஜி.ரமேஷ் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர், வரும் 22ஆம் தேதிக்குள் அந்நீதிமன்றத்தில் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது காலியிடத்தை நிரப்ப கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 24ஆம் தேதிக்குள், இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில், வினீத் கோத்தாரியை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்ததது. ஆனால், நீதிபதி கோத்தாரியின் கோரிக்கையை ஏற்று, அவரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது கொலீஜியம்.

கடந்த சனிக்கிழமையன்று (நவம்பர் 10), உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டுமென்று மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் அராதே கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால் காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.