புரோ கபடி: ஹரியானாவுடன் டிரா செய்தது தமிழ் தலைவாஸ்!

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதிய புரோ கபடி லீக் போட்டியில், கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 32-32 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா செய்தது.


மும்பையில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸுடன்தமிழ் தலைவாஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சிறப்பான துவக்கம் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி முதல் 5 நிமிடங்களிலேயே 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேற்றமடைந்தது. அதன் பின்னும் தொடர்ந்து தலைவாஸ்ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடியும் நேரத்தில் ஹரியானா அணி சிறப்பாக விளையாடி 19-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தொடர்ந்து போராடின.26-24 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா முன்னேற்றம் பெற்றிருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் உத்வேகத்துடன்விளையாடியது. கடைசி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி, 32-32 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை டிரா செய்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.