ஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில் நினைவேந்தல்

வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000
ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களின் 19 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்று வந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் இன்று நடைபெற்றன.
மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் படையலிட்டு மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர்தூவி, சுடரேற்றி நினைவு வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியினர், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடமாடும் குருதிக்கொடை முகாம் ஹாட்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.