பெரும்பான்மையை காட்ட வாய்ப்பளிக்க தயார் : மகிந்த

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு சபாநாயகரின் செயற்பாடே காரணமென பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உடனடியாக தேர்தலுக்கு சென்று மக்கள் கருத்துகளை அறிந்து நிலையான பாராளுமன்றத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்‌ஷ அரசியலமைப்புக்கமைய பெரும்பான்மையை காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தனது தரப்பினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.