கஜா புயலில் அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்தது? - முதல்வர் அறிக்கை

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழக கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் நுழைந்ததையடுத்து, சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த புயல் காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுமார் 13,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கடலோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இருப்பினும் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னதாகவே ஆலோசனை நடத்தி அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இன்று பெரும் உயிர் சேதத்தை தவிர்த்துள்ளனர். கஜா புயலுக்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  
Powered by Blogger.