கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க ஹிமாச்சல் அரசு ஆலோசனை!

உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க ஆலோசனை நடத்தி வருவதாக அம்மாநில முதல்வர் ஜெயராம் தாகூர் தெரிவித்துள்ளார்.


சணல் பயிருக்கு ஊடுபயிராகும் மருத்துவ உபயோகத்திற்கான கஞ்சாவை சட்டபூர்வமாக்கியுள்ளது உத்தரகாண்ட் மாநில அரசு. இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கஞ்சா பயிரிடுதல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, அதன் அண்டை மாநிலமான இமாச்சல் பிரதேசத்திலும் கஞ்சாவை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச அளவில் இமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சாவுக்குச நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அதை சட்டபூர்வமாக்கி, அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர், கஞ்சா பயிறுதலை சட்டபூர்வமாக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து சட்டங்களை முழுவதும் ஆய்வு செய்தே முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கஞ்சா பயிரிடுதல் மற்றும் விற்பனை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.