காற்றின் மொழி - திரை விமர்சனம்!

ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு, சாண்ட்ரா ஏமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காற்றின் மொழி'.


கடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பாலிவுட் திரைப்படம் 'தும்ஹரி சுலு'வின் ரீமேக் தான் இந்த காற்றின் மொழி.


ராதாமோகன் இயக்கத்தில், தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வீட்டு மனைவியாக இருந்து பிரபல ரேடியோ வர்ணணையாளராக மாறும் ஜோதிகா சந்திக்கும் சவால்கள் மற்றும் குடும்ப பிரச்னைகளை ரொம்பவே, கலகலப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தனது ஸ்டைலில் காட்டியுள்ளார் இயக்குனர் ராதாமோகன்.

துறுதுறுப்பான வீட்டு மனைவி ஜோதிகா. அவர் மீது ரொம்பவே பாசம் வைத்திருக்கும் கணவர் விதார்த், தனக்கு பிடிக்காத ஒரு வேலையே வெறுப்போடு செய்து வருகிறார். இவர்களின் மகன், எல்லா சிறுசுகளையும் போல, எப்போது பார்த்தாலும் மொபைலில் வீடியோ கேம்ஸ் விளையாடும் ஒரு வாண்டு. படிப்பு சரியாக வராததால், உயர்ந்த வேலைகளில் இருக்கும் தனது சகோதரி மற்றும் தந்தையின் விமர்சனங்களுக்கு அடிக்கடி ஆளாகிறார் ஜோதிகா.

எதிர்பாராத விதமாக ரேடியோவில் அவருக்கு ஒரு வேலை கிடைக்கிறது. இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் இந்த ஷோவில், லவ் அட்வைஸ் கொடுக்கிறார் ஜோதிகா. இந்த புதிய வேலையால் ஆயிரக்கணக்கானோரின் மனதை தொட்டு பிரபலமாகிறார் ஜோதிகா. ஆனால், இதனால் குடும்பத்தில் அவருக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் மீதி கதை.

துவக்கத்தில் ஒன்றிரண்டு காட்சிகளும், வசனங்களும் எடுபடவில்லை. ஆனால், அதன்பின் படம் பிக்அப் ஆகி, ரொம்பவே சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. கதைக்கு இடையூறு ஏற்படாதவாறு சில பாடல்கள், யதார்த்தமான வசனங்கள், காட்சிகள் என

ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை படத்தை ஜோதிகா சுமந்து செல்கிறார். துறுதுறுப்பான காட்சிகளாகட்டும், எமோஷனலான காட்சிகளாகட்டும், பழைய ஜோதிகாவை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. தோற்றத்திலும், நடிப்பிலும், நம் அக்கம்பக்கத்தில் வாழும் ஒரு பெண்ணாகவே நிற்கிறார். விதார்த் முதல் சிறப்பு தோற்றத்தில் வந்த சிம்பு வரை அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். முக்கியமாக மொழி படத்தை போலவே எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் வந்து அனைவரது மனதையும் கவர்கிறார்.

குடும்பத்தோடு எல்லோரும் பார்த்து ரசிக்கும் மற்றொரு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். காற்றின் மொழி, நிச்சயம் எல்லரோ மனதையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. டோன்ட் மிஸ் இட்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.