மீண்டும் கட்சி தாவல்களுக்கான வாய்ப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஆளும் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) எம்.பிக்களுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் தமக்கான பெரும்பான்மையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி தரப்பிலிருந்து சிலரை தம் பக்கம் இழுப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மீண்டும் கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.