அரசாங்கத்திற்கு ஐதேக சவால்

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அடுத்த வாரத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.


பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு தாம் சவால் விடுப்பதாகவும் வாக்களிப்பின் போது பிரச்சினையைத் தோற்றுவிக்காது அதனை எதிர்கொள்ளத் தயார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. திருட்டுத்தனமான அரசாங்கத்தின் கீழ் அதற்கு நாம் தயாரில்லை. சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்குச் செல்வதற்கு நாம் தயார்.

என லக்‌ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டார். 
Powered by Blogger.