கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோதி குடை சாய்ந்ததில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.இன்று (சனிக்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியிலிருந்து ஏ9 வீதி ஊடாக பயணிக்க முற்பட்ட முச்சக்கர வண்டி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காருடன் மோதி, முச்சக்கர வண்டி குடைசாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த சிறுவன் முச்சக்கர வண்டிக்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.