ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வேண்டுகோள்

மாவீரர் நாள் நினைவேந்தல்
கார்த்திகை -27
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்


எமக்காக விடுதலை வேண்டி மூட்டிய பெரும் தீக்களத்தில் போராடி தங்கள் இன் உயிரினை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள் தமிழீழ மாவீரர் நாள் -கார்த்திகை 27

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு துயிலும் இல்லத்திலும்  மாவீரர்களுக்கான நினைவு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடை பெற்று வந்ததை  நாம் அனைவரும் அறிவோம்.

2009 இன்பிற்பாடு எமது ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எமது மாவீரச் செல்வங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை துரதிஸ்டவசமாக எம்மால் கடந்த வருடம் வரை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. எனினும் நாம் இந்த முறை எப்பிடியவது துயிலும் இல்லத்திகு பக்கத்தில் ஒரு இடத்தில் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடாத்துவது என மாவீரர்களின் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது..

துயிலும் இல்ல பகுதி முழுவதும்  சிறீலங்கா இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் காணப்படுவதனால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள  காணியில் மேற்படி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகவுகளை மேற்கொள்ளதென மாவீரர்களின் பெற்றோர்களால் தீர்மானித்து அதற்கான வேலைத்திட்டங்கள் இன்று   ஆரம்பிக்கப்பட்டன.

மாவீர்நாள் நினைவேந்தல் மேற்கொள்வதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் மேற்படி மவீரர் பெற்றோர்களினதும் பொதுமக்களினதும் ஒத்துளைப்போடு  இன்றையதினம் எம்மால் மேற்கொள்ளப்பட்டன.

எங்கள் பிள்ளைகளின் மனங்கள் குளிர அவர்களுக்கான நினைவு நிகழ்வொன்றை அனுஸ்டிப்பதற்காக நாம் எல்லோரும் இணைந்து ஆயத்தமாகி உள்ளோம்.
முன்னாள் போராளிகளும் மாவீரர் பெற்றோர்களும் பொது மக்களும்  கரம் கொடுத்து  இணைந்து மேற்படி நிகழ்வினை ஒழுங்கமைத்து உணர்வு பூர்வாமாக அனுஸ்டிப்பது என உறுதி எடுத்துள்ளோம்.

 எதிர் வரும் வரும் வாரம் அதாவது 20 ஆம் திகதியிலிருந்து  எம்மால் ஒழுங்கு படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட துயிலுமில்ல பகுதியில் நினைவு நாளுக்கான வேலைத்திட்டங்கள் தினமும் மேற்கொள்ளப்படும் என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்.

இந்த வீர மறவர்களின் நினைவு நாளினை நாம் சிறப்பாக மேற்கொள்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துளைப்பும் அவசியமாகும். வேலைத்திட்டங்களாக..

1.சிரமதான வேலைகள்
2.வேலி அமைத்தல்
3.நுழைவாயில் வடிவமைத்தல்
4.மண்ணினை மட்டப்படுத்தல்
5.தீப்பந்தம் சுற்றுதல்
6.தீப்பெட்டியுடன் சாம்பிராணி அடங்கிய பைகள் தயாரித்தல்.
7.பிரதான தீபம் தயாரித்தல்
8.பிரதான ஈகைச்சுடருக்கான மேடை தயாரித்தல்.
9.சிவப்பு மஞ்சள் கொடிகளல் அலங்கரித்தல்
10.தீப்பந்தம் நடுதல்
11.தென்னை அல்லது பழ மரக்கன்றுகள் தருவித்தல்
12.மாவீரர் பெற்றோர்களை கௌரவித்தல்.

தூர இடங்களில் இருந்து வரும் பெற்றோர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ப்பட்டுள்ளன.

எனவே எமது இந்த மாவீரர் நாளுக்கான நிகழ்வினை ஒழுங்கமைப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துளைப்பினை வேண்டி நிற்கிறோம்.

குறிப்பாக
1.கிராம அபிவிருத்தி சங்கம்
2.மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்
3.கிராம விளையாட்டு கழகங்கள்
4.வர்த்தகர் சங்கம்
5. கமக்காரர் அமைப்பு
6.பொது அமைப்புகள்

போன்ற அமைப்புக்களை சார்ந்தவர்கள் எம்மோடு இணைந்து எமது மாவீரச் செல்வங்களை நினைந்து வணக்கம் செலுத்துவதற்கு ஒத்துழைப்புத்தர முன்வாருங்கள்

அனத்து தமிழ் மக்களும் பேதங்களை மறந்து விடுதலைப்புலிகளின் காலத்தில் எவ்வாறு மாவீரர் நாள் மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிகழ்ச்சி நிரலை அப்படியே சற்றும் மாற்றமின்றி அந்த நிகழ்வின் புனிதம் கெடாதவாறு அனைவரும் இணைந்து எமது மாவீரச் செல்வகளை நினைவு கூருவோம்.

"மானிட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம் மதம் மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் உயிர்வாழ்வார்கள்."

மேலதிக விபரங்களை அறிய எம்மோடு நேரடியக தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.