செல்வம் செழிக்கவும், வெற்றிகள் கிடைக்கவும், சிறப்பு வழிபாடுகள், செய்யும் வலம்புரி சங்கு

பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் அக்காலம் முதல் சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது.



இதில் மிகவும் விசேஷம் கொண்டதுதான் வலம்புரி சங்கு. இது எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. லக்ஷ்மி கடாட்சம் கிடைத்தால் வாழ்வு வளம் பெறும்தானே.


வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.


தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.


இத்தகைய சிறப்பு மிக்க வலம்புரி சங்கை சிறப்பு வழிபாடுகள், பூஜைகளை எண்கணித மேதை பண்டிட் திரு.அசோக்பாரதி முன்னிலையில் வேத விற்பன்னர்கள் செய்து மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கின்றனர். வலம்புரி சங்கு உள்ள வீட்டில் செல்வ வளம் மிகும். நிரந்தமான மகிழ்ச்சி நிலைத்து நிற்கும் என்பது உண்மையிலும் உண்மை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.