இந்தியா திரும்பிய இணையர்!


திருமணத்திற்குப் பின் தீபிகா-ரன்வீர் இணை இன்று (நவம்பர் 18) இந்தியா திரும்பியுள்ளனர்.


பாலிவுட்டின் பிரபல நடிகர்களான தீபிகா படுகோன், ரன்விர் சிங்கும் காதலித்து வந்தனர். இருவரும் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இருந்தாலும் தங்கள் காதல் பற்றி வாய் திறக்காமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தீபிகாவும் ரன்வீரும் தங்கள் திருமண தேதியை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில், ‘எங்கள் திருமணம் 2018, நவம்பர் 14மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம். அன்புனடன் தீபிகா, ரன்வீர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Powered by Blogger.