மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் ஜனாதிபதி : பொன்சேகா!

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.


தற்போது அலரி மாளிகையில்  இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா,

“பொய்க் குற்றச்சாட்டுக்களுக்காக சிறைக்கு செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை மேலும் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி எங்களது வாயை அடைக்க முடியாது.”

ஜனாதிபதிக்கு கடந்த காலத்தில் கூறிய வாக்குறுதிகள் எதுவும் நினைவில் இல்லை போல அதனால் தான் கேட்பார் சொல் கேட்டு மஹிந்தவோடு கூட்டு சேர்ந்துள்ளார்.

மைத்திரியின் கடந்த சில செயற்பாடுகளால் மஹிந்த ஆரம்பித்து வைத்த இனவாதம் மீண்டும் தழைத்தோங்கியுள்ளது.

ஜனாதிபதியின் கட்சியிலேயே அவருக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள் இவ் விடயம் ஜனாதிபதிக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்.

கூட்டணியில் உள்ளவர்கள் பலர் எம்மோடு இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்கள் . அவர்களில் பலருக்கு மஹிந்த பிரதமராகி மீண்டும் கடந்த காலத்தை நாட்டில் ஏற்படுத்த விருப்பமில்லை.

ஐக்கிய தேசிய கட்சியோடு கை கோர்த்துள்ள ஏனைய கட்சிகள் மிக உறுதியோடு எம்மோடு இருக்கின்றன. நாங்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாட்டின் இறையாண்மையையும் பேணிப் பாதுகாப்போம்.“ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.