மீண்டும் மத்திய வங்கியின் ஆளுனர் பதவி யாருக்கு??

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக கடமையாற்றிய காலப் பகுதியில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றியிருந்தார்.

மத்திய வங்கியின் ஆளுனராக தற்போது கலாநிதி இந்திராஜித் குமாரசுவாமி கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ராலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் தற்போதைய ஆளுனர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் கலாநிதி இந்திரஜித்குமாரசுவாமி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் பிரதமரின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் அஜித் நிவாரட் கப்ரால் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக பதவி வகித்த போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தி அஜித் நிவாட் கப்ராலிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Cenrtal Bank of Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.