கேகாலை மாவட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள வேதன போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (31ஆம் திகதி) கேகாலை மாவட்டத்தினை சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் இணைந்து தெஹியோவிற்ற நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதில் அதிகமாக தெஹியோவிற்ற வலயத்தினை நேர்ந்த 60ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 300ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். இன்று மாலை 3.00 மணி அளவில் தெஹியோவிட்ட எரிப்பொருள் நிரப்பும் நிலைய அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆதரவு பேரணி கோசங்களை எழுப்பிய வண்ணம் தெஹியோவிற்ற நகரின் ஊடாக தெரணியகலை பாதை சந்தி வரை சென்றது. சுமார் இரண்டு மணித்தியாலம் வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 


இதனால் கொழும்பு ஹட்டன் பிரதான விதி குறிப்பிட்ட நேரங்களாக ஒரு வழி போக்குவரத்தானது. இதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதன்போது ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து உடனடியாக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வாக 1000 ருபாவை வழங்கவேண்டும் என்றும் அரசு இதில் உடனடி கவனத்தை செலுத்தவேண்டும் என்றும். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பகர சூழ்நிலையில் நாட்டின் பிரதமராக யார வருகிறாரோ அவர் முதலில் எமது மக்களின் பிரச்சினைக்கு திர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் கருத்துக்களை பதிவு செய்தனர்.

அத்தோடு காலத்துக்கு காலம் உயருது ஆட்சி எங்களுக்கு சம்பளம் இல்லையா மனசாட்சி, படியாய் மலையேறி மடிமடியாய் கொழுந்து எடுத்தோம் புடிபுடியாய் வாங்கலயே சம்பளம், கால்வாசி சம்பளத்தை தந்துவிட்டு விலைவாசியை உயர்த்திவிட்டாய் எப்படி ஜிவிப்போம் மற்றும் நாங்கள் பிச்சை கேட்கவில்லை நீ இல்லை என்று சொல்ல எங்கள் ஊதியத்தை கொடு ஆயிரத்தை எனவும் வெயில் பனி பாராது உழைக்கும் உழைப்புக்கு ஊதியத்தை கொடு எனவும் பல பதாதைகள் ஏந்தப்பட்டு இருந்தன. இப்போராட்டத்தை ஏற்பாடு செய்த அதிபர்கள் கூறுகையில் இன்று நாடாளவிய ரிதியில் தொழிலாளர்களுக்கு சார்பாக வலுத்துள்ள இந்த தார்மீக போராட்டத்தில் மலையக சமூகத்தை சார்ந்து இருக்கும் நாங்கள் தொழிலாளர்களின் சம்பள போராட்டத்திற்கு குரல் கொடுப்பது ஒவ்வொரு ஆசிரியனிதும் கடமையாகும். இது வெறுமனே தொழிலாளர்களின் பிரச்சினை இல்லை. ஒரு சமூகத்தின் பிரச்சினை எனவே மலையக சமூகத்தினை சேர்ந்த அனைவரும் இந்த தார்மீக போராட்டத்தில் பங்குக்கொள்ளவேண்டும் என்றனர். இந்த ஆசிரிய எழுச்சி எம் இனத்திற்காக அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆசிரிய சமூகங்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.  

No comments

Powered by Blogger.