யாழில் சித்த மருத்துவ மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!


புத்தளம், குப்பை மேட்டை எதிர்த்து போராடி வருகின்ற மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ மாணவர்கள் யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று மதியம் யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள சித்த மருத்துவக் கல்லூரிக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் அறுவக்காடு பகுதியில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அதற்கமைய தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சித்த மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments

Powered by Blogger.