தேர்தலுக்காக சுவிட்சர்லாந்து குடியுரிமையை இரத்து செய்தார் கீதா!

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் முகமாக காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது சுவிட்சர்லாந்து குடியுரிமையை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.


இந்நிலையில் குறித்த ஆவணத்தை இன்று (புதன்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவற்றை கையளித்ததன் மூலம் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ அங்கு மேலும் தெரிவிக்கையில், “நான் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். எனது குடும்பத்திலிருந்து வந்த அழுத்தத்திற்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் குடியுரிமைகளை நான் கைவிட்டுவிட்டேன். காலி மாவட்டத்திலுள்ள மக்களின் நலனுக்காக நான் இதை செய்தேன்” என கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.