புதிய அரசாங்கம் சட்டவிரோதமானது

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் குறித்த அமைச்சுக்கள்சார் ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்கக்கூடாதென தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாவது பிரேரணையை முன்வைத்துள்ளது.


தற்போதுள்ள அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும் இந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சு பதவிகள் சட்டவிரோதமானது என்றும்  தெரிவித்து குறித்த பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே 6 உறுப்பினர்கள் கையொப்பத்துடனான இரண்டாவது பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வருகின்றன. இதற்கிடையில், நாளை மறுதினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி இந்த பிரேரணையை முன்வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.