வவுனியாவில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்

https://www.tamilarul.net/
வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சமப்வம் தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது – 20), ராஜரட்ணம் (வயது – 20) ஆகிய இரு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார், 18 மற்றும்; 24 வயதினைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.