மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்கள் மீட்பு

யுத்தம் நிறைவடைந்து காணாமல் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கை
மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து எந்ததொரு பயனுமில்லையென இரா.சம்பந்தன் கூறிய கருத்து தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில் வாழும் 6 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு புலம்பெயர்வாழ் உறவுகளின் உதவியுடன் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அனந்தி சசிதரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாதுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாக கூறி, வாக்குகளை பெற்றுச் சென்றனர்.
ஆனால், தற்போது தமிழ் மக்களின் விடயத்தில் எதனையும் செய்யமுடியாமல் இருக்கின்றதென சம்பந்தன் கூறும் கருத்து தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது நாடு முழுவதற்குமான முக்கிய பதவியாகும். அப்பதவியை வைத்து மூன்றரை வருடமாக இவரால் எதையும் செய்ய முடியவில்லை.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியை பலபடுத்துவதனை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு இவர் செயற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது” என அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்

No comments

Powered by Blogger.