நடிகை அபிநயா: தேர்தல் தூதுவராக நியமனம்!

நாடோடிகள், ஈசன் படங்களில் நடித்த நடிகை அபிநயா, தற்போது தேர்தல் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான பிராண்ட் அம்பாசிட்டராக, பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ‘நோ எக்ஸ்க்யூஸ் டே’ என்ற தலைப்பில் முஃபாகம் ஜா கல்லூரியில் தேர்தலின் போது வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அபிநயாவின் தந்தை அவரது சார்பாக பங்கேற்று, ‘மாணவர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், இப்பணிகள் குறித்து, “தங்கள் உடல்நலப் பாதிப்புகளால், மாற்றுத்திறனாளிகள் பலரும் தேர்தலில் பெரும்பாலும் வாக்களிக்க வரமாட்டார்கள். இந்தநிலையை மாற்ற, தெலங்கானா மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக, என்னை பிராண்ட் அம்பாசிட்டராகவும் நியமிச்சிருக்காங்க. மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்பு உணர்வு கொடுக்கிற விஷயங்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எனக்குச் சொல்கிறார்கள். அதன்படி, பல பகுதிகளும் நேரடியாகச் சென்று, மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கவேண்டும், தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கணும்னு வலியுறுத்துறேன். இதனால் நிறைய மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பாங்கனு நம்புறேன். தவிர, கல்வி மற்றும் மருத்துவத்துறையிலயும் இப்போது விழிப்பு உணர்வு கொடுக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார் அபிநயா. 

No comments

Powered by Blogger.