டிஜிட்டல் திண்ணை: கஜா - விரைவில் அனைத்துக்

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். சிக்னல் கட்டாகி கட்டாகி வந்தது.
"பட்டுக்கோட்டையில் இருக்கிறேன்!" என்று மட்டும் ஒரு மெசேஜ் வந்தது. சற்று நேரத்தில் அடுத்த மெசேஜ் வந்தது.
"மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியலாக இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஒரு டீம் மன்னார்குடியில் வலம் வருகிறது. செல்லூர் ராஜு போகும் இடங்களில் எல்லாம் மக்கள் அவரை மறித்துவிடுகிறார்கள். 'உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சி கொடுக்கத்தான் நாங்க வந்திருக்கோம். இப்படி ஒரு புயல் வரும்னு நாங்களே எதிர்பார்க்கல. இல்லைன்னா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததில் எவ்வளவு கவனமா இருந்தோமோ அப்படி இதுலயும் கவனமா இருந்திருப்போம். எதிர்பார்க்காம எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. இனி அதை எப்படி சமாளிக்கிறதுன்னுதான் பார்க்கணும்..." என்று சொல்ல.. ' அதான் நீங்க சமாளிக்கிற லட்சணத்தை பார்க்கிறோமே..' எனக் கொந்தளித்துவிட்டார் ஒரு விவசாயி.
அவரை அதிமுகவினர் சமாதானப்படுத்த, 'என்ன சமாதானப்படுத்துறது இருக்கட்டும். என்னோட தோட்டத்தில் இருந்த 650 தென்னை மரம் போய்டுச்சி. இன்னும் ஒரு அதிகாரியும் கணக்கு எடுக்க வரல. அப்புறம் என்ன நிவாரணம் கொடுக்கப் போறீங்க? ஒரு மரத்துக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவா கொடுத்தால் அதுல எந்த பிரயோஜனமும் இருக்காது. நீங்க எதுவும் செய்யப் போறது இல்லைன்னுதான் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு போய்ட்டு இருக்காங்க. மிச்சம் இருக்கிறவங்களையும் உங்க அரசாங்கம் கொல்ல நினைக்குதா? முதலமைச்சர் இங்கே எல்லாம் வந்து பார்க்க முடியாதா?' என்று சொல்லி அழவே ஆரம்பித்துவிட்டார்.
செல்லூர் ராஜு என்ன செய்வதென திகைத்து நிற்கையில், 'எல்லாமே போய்டுச்சுங்கய்யா... இங்கே இருக்கிற நிலமையை நீங்களாவது முதலமைச்சர் ஐயாகிட்ட சொல்லுங்க...' என ஒரு பெண் செல்லூர் ராஜு காலில் விழுந்து கதறினார். பதறிப்போனவர், 'முதல்வர் உங்க பிரச்சினைக்காகத்தான் பிரதமரை பார்க்க போயிருக்காரு. திரும்பி வந்ததும் நிச்சயமாக நானே இங்கே கூட்டிட்டு வர்றேன். நீங்க கேட்கிற எல்லாமே அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்...' என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் திணித்தார்.
அந்த பெண்ணோ, 'சாமீ இதெல்லாம் வேண்டாங்க.. எங்க தென்னைக்கு என்ன நிவாரணமோ அதை கொடுங்க... ' என்று பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். செல்லூர் ராஜுவுக்கு முகத்தில் ஈயாடவில்லை.
இப்படித்தான் அமைச்சர்கள் போகும் இடமெல்லாம் அவர்களிடமே அரசைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் மக்கள். களத்தில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் தினமும் நடக்கும் எதிர்ப்பு சம்பவங்களை அப்படியே முதல்வரிடம் போன் மூலம் சொல்லிவிடுகிறார்கள்.
'அமைச்சர்கள் போன் நெம்பரை மட்டும் கொடுத்துட்டீங்க... கரன்ட்டும் இல்ல. டவரும் இல்ல. அப்புறம் எங்கே போன் எடுக்கும்னு கேட்கிறாங்க...' என்றும் ஒரு அமைச்சர் சொன்னாராம். அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு, 'நீங்கதான் எல்லாத்தையும் பேசி சரி பண்ணணும்' என்பதை மட்டுமே எல்லா அமைச்சர்களிடமும் சொல்கிறாராம் முதல்வர்." என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
"ஸ்டாலின், தினகரன், கமல், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் பலரும் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் சுற்றிவருகிறார்கள். டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட்ட முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர்

No comments

Powered by Blogger.