வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் இலவசக் கல்விக் கருத்தரங்கு

வெண்கரம் அமைப்பு, கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவசக் கல்விக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

வெண்கரம் மாணவி அமரர் சிவநேசன் றெஜினா அவர்களின் ஞாபகார்த்தமாக காட்டுப்புலம் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று வியாழக்கிழமையும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
வறுமை கல்விக்குத் தடையல்ல என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் திறமையான வளவாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல்களை வழங்கவுள்ளனர்.
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் ஓரிரு பாடங்களில் சித்தியடையாமையால் தமது எதிர்காலத்தை இழக்கக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இந்தக் கல்விக் கருத்தரங்களில் ஆர்வமுடைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.