மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குபோலி ஆவணம் மூலம் தடை

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் பொலிஸார் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.


குறித்த ஆவணத்தை யார் வெளியிட்டுள்ளது என்பது தொடர்பிலான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இதேவேளை, அதில் வழக்கு இலக்கமிடப்படவில்லை. திகதியில் தவறு. தண்டனைச் சட்டக்கோவை இலக்கம் போன்றனவும் தவறாக உள்ளது.

மேலும், நீதிவானின் கையொப்பம் காணப்படவில்லை என்பதுடன், கடிதத்தில் எழுத்துப் பிழைகள் , சொற்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Jaffna  #Tamilarul.net 
Powered by Blogger.