இஸ்ரேலுக்கு நேரடி விமான சேவை

இந்தியாவின் கோவா மாநிலத்திலிருந்து இஸ்ரேல் வரையில்
நேரடி விமானச் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மும்பையில் நடைபெற்ற 49வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இஸ்ரேல் தூதரக ஜெனரல் பின்கேல்ஸ்டீன் கலந்துகொண்டார். அப்போது அவர், "இஸ்ரேலிய மக்கள் இந்தியாவை விரும்புகிறார்கள். குறிப்பாகக் கோவாவின் கடற்கரையை விரும்புகிறார்கள். அதனால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலிருந்து கோவா வரைக்குமான நேரடி விமானச் சேவையை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் வழங்கவுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகள் நேராகக் கோவாவுக்கு வந்து அதன் கடற்கரையின் அழகை அனுபவிப்பார்கள். அதேபோல, இந்தியப் பயணிகளும் இஸ்ரேலுக்கு வருகை தந்து அதன் அழகை ரசிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது இரு நாடுகளும் ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் பொருட்டு பல ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தொடங்கி கடந்த ஆண்டோடு 25ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.