குற்றப்பத்திரிக்கைக்கு தடை!

நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குறித்துத் தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் தொடர்பாக, ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் அன்று ,மாலையே விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் ஊழியர்கள் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தங்களுக்கும், கட்டுரைகள் வெளியானதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
வழக்கை இன்று (நவம்பர் 22) விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கோடு, இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, ”நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்த எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, ஆனந்த வெங்கடேஷ் வழக்கு விசாரணையின் போது இந்து ராம் அவர்களை அனுமதித்தது ஏன் என நவம்பர் 28ஆம் தேதிக்குள் எழும்பூர் 13வது நீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்” என்பது நினைவுகூரத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.