ராஜஸ்தானில் ட்ரம்ப் மருமகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன், திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று ராஜஸ்தான் வரவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப். இவாங்காவின் கணவர் ஜேரட் குஷ்னர், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது ஜேரட் குஷ்னர் திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்திற்கு இன்று (நவம்பர் 22) வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிடிஐ ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஓ.பி. கசேரா, “அமெரிக்க அதிபரின் மருமகன் இங்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இவாங்கா ட்ரம்ப் வருகை குறித்த எந்த தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இவாங்கா இந்தியா வந்திருந்தார்.
அதே நேரத்தில் யாருடைய திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜேரட் குஷ்னர் வரவுள்ளார் என்ற தகவலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
22 முதல் 25ஆம் தேதிவரை அவர் தங்கலாம் என்பதால் ஜெய்சல்மரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்க அதிபரின் மருமகன் வருகையை முன்னிட்டு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்களுடன் கூடிய கூடுதல் படையும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது” என ஜெய்சல்மர் எஸ்.பி.ஜெகதீஷ் சந்திர சர்மா தெரிவித்துள்ளதாக பிடிஐ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும் ஜெகதீஷ் சந்திர சர்மா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.