சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்

சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், அதிபரின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான, கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ஊடகப் பிரிவுக்கு நேற்றுச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கலாநிதி சுரேன் ராகவனை, ஊடகப் பிரிவு பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதேவேளை,அதிபர் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, சமிந்த சிறிமல்வத்த, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே, அவரது தனிப்பட்ட அதிகாரியாக சமிந்த சிறிமல்வத்த பணியாற்றியிருந்தார்.
Powered by Blogger.