விவசாயிகளை வாட்டும் வெங்காய விலை!

வெங்காயத்துக்கான கொள்முதல் விலை குறைந்து வருவதால் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் தற்போது தமிழ்நாடும், கேரளாவும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெருமளவிலான சரக்குகள் திரும்ப அனுப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்கள் வெங்காயத்தின் மீது கவனம் செலுத்தாததால் அதிக அளவிலான சரக்கு தேக்கமடைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.325 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் தற்போது வரை தேக்கத்தில் உள்ளது. இதனைச் சந்தைப்படுத்த விநியோகர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் அதிக உற்பத்தி காரணமாக வெங்காயம் பெருமளவில் தேக்கமடைந்து, அதன் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்கம் மேலும் தொடரும் என்பதால் வெங்காயத்தின் விலை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது. தற்போது ராய்ச்சூர் வெங்காய மண்டியில் ஒரு கிலோ வெங்காயத்தின் கொள்முதல் விலை ரூ.5.21 ஆகவும், கோலாரில் ரூ.16 ஆகவும், சிக்மகளூரில் ரூ.17 ஆகவும் இருக்கிறது.

No comments

Powered by Blogger.