தவறவிட்ட காதலின் வலி!

படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பின்னரும் படக்குழுவினர் புரொமோ வீடியோக்கள் வெளியிடுவதும் அதற்கு ரசிகர்கள் பெரும்
வரவேற்பு கொடுப்பதும் சமீபகாலமாகத் தமிழ் சினிமா பார்க்காத சம்பவம். 96 திரைப்படம் அதை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியாகி ஒரு மாதம் கடந்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியபோதும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பின்னரும் படம் பற்றிய கருத்துகள் தற்போதும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தன் வாழ்நாளைத் தானே அதிகரித்துக்கொள்ளும் என்பதை 96 திரைப்படம் நிரூபித்துக்காட்டியுள்ளது.
பள்ளிக்கால நினைவுகள், காதல், திரைக்கதையின் பெரும் பகுதி ஒருநாள் இரவில் நடந்து முடிவது, இசை , ஒளிப்பதிவு என அதைக் கொண்டாடுபவர்கள் அடுக்கும் காரணங்கள் நிறைய உள்ளன. ரசிகர்களின் வரவேற்பை உணர்ந்த படக்குழுவினர் தற்போது படத்தில் இடம்பெறாத காட்சிகள் அடங்கிய புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
புகைப்படக் கலைஞராக வலம்வரும் விஜய் சேதுபதி சிறு வயதில் அதற்கான விருப்பத்துடன் இருந்ததற்கான ஷாட் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் வயதான பின்னரும் மாறாத பல பழக்கவழக்கங்கள் பல்வேறு ஷாட்டுகளில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. “எல்லாமே மாறி இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா எதுவும் மாறல” என்ற த்ரிஷாவின் வார்த்தைகள் அந்த இடத்தில் புதிய அர்த்தம் பெறுகிறது.
தவறவிட்ட காதலின் வலியை, தனிமையை மீண்டும் இந்த  என்ற வீடியோவும் வழங்குகிறது.

No comments

Powered by Blogger.