காஷ்மீர்: 2018இல் 400 தீவிரவாதிகள் பலி!

நடப்பு ஆண்டில் காஷ்மீரில் இதுவரை 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 (நவம்பர் 23) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், வருடாந்திர அடிப்படையில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்போது உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும், இதுவரையில் காஷ்மீரில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானோர் தீவிரவாதிகளாவர். 2008ஆம் ஆண்டில் 505 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு, இப்போதுதான் இவ்வளவு பேர் பலியாகியுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வர முயற்சி செய்வோருக்கு எதிரான இந்நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது தீவிரவாதிகள் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய ராணுவத்தின் பேச்சாளரான ராஜேஷ் கலியா பேசுகையில், “கடுமையான துப்பாக்கிச் சூட்டின்போது ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பிரேதங்களுடன், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையில் ஏற்படும் மரணங்கள் 2012ஆம் ஆண்டில் 99ஆகக் குறைந்திருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.