ஒரிஜினல் ‘சிங்க மகன்’ பராக்

சிங்கத்தின் மகன், புலி இனம், சிறுத்தையின் வாரிசு என்றெல்லாம் தமிழகத்தில் அதிகம் போஸ்டர்களைக் கண்டிருப்போம். அவர்களுக்கும்
அந்த விலங்குகளுக்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஆனால், மேற்கண்ட வார்த்தைகளுக்கு முற்றிலும் நெருக்கமான ஒரு உயிரினம் தான் ‘சிம்பா’.
1994இல் ரோகர் அல்லர்ஸ் மற்றும் ராப் மிங்காஃப் ஆகியோர் இயக்கி வெற்றிபெற்ற திரைப்படம் ‘தி லயன் கிங்’. டிஸ்னி ஸ்டூயோவின் பொற்காலம் எனக் கருதப்படும் அந்த சமயத்தில், தன்னுடைய அனைத்து படைப்புகளையும் அனிமேஷனில் கொண்டு வந்தது டிஸ்னி. அவற்றில் தனித்துவமானதும், பல ரசிகர்களின் மனம் கவர்ந்ததுமான லயன் கிங் படத்தை தற்போது வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷனில் உருவாக்கியிருக்கிறது டிஸ்னி.
புத்தகத்தில் படித்தாலும், அனிமேஷனில் பார்த்தாலும் சலிப்புத் தட்டாத லயன் கிங் திரைப்படத்தை, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் திரையில் பார்க்கக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

No comments

Powered by Blogger.