புதுப்பேட்டை 2? ஆயிரத்தில் ஒருவன் 2? - செல்வராகவன் ஆசை

இரண்டாம் பாகங்களின் காலம் என ஒன்று தமிழ் சினிமாவில் இருந்தது. எதிர்பாராமல் வெற்றிபெற்ற திரைப்படங்களை உடனுக்குடன் இரண்டாம்
பாகம் என்ற பொட்டிக்குள் அடைத்து, அவற்றை டிவி சேனல்களுக்கு குறைந்த விலையில் கொடுத்துவிட்டு நின்றது தமிழ் சினிமா. இரண்டாம் பாகத்துக்கான யோசனை இல்லாமல், எடுக்கப்படும் படங்களை வலிய உருவாக்கினால் அதன் ரிசல்ட் என்னவென்று தமிழ் சினிமா உணர்ந்தது.
தற்போது அந்த சூழல் மாறியிருக்கிறது. முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான அடிப்படைகளை உருவாக்குகின்றனர் இயக்குநர்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்லமுடியாது. காரணம், இவர்களுக்கெல்லாம் முன்பே இரண்டாம் பாகத்துக்கான அடிச்சுவடுகளை விட்டுவைத்து படம் இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். அப்படிப்பட்டவரை சாதாரணமாக கடந்துவிடுவார்களா?
செல்வராகவன் இயங்கிவரும் தமிழ் சினிமா முதல், சமூக வலைதளங்களையும் விடாமல், டி.வி. நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும் கூட அவரிடம் கேட்கப்படும் கேள்வி ‘புதுப்பேட்டை 2 எப்போது?’ என்பது தான். இதற்கும் முடிந்த அளவு தன்மையான பதில்களைச் சொல்லிவந்த செல்வராகவன், தற்போது தனது மனதிலுள்ள ஆசையைக் கூறியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் செல்வராகவன் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில் “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2’ எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2” எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.