சமந்தா: மங்கலின் பின்னணியில் மங்காத காதல்

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பகிர்ந்திருக்கும் புகைப்படம், தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் நடித்த நடிகையர் திலகம், யூடர்ன், சீமராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்தன. இவரது நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட தமிழ், தெலுங்கில் சில படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 23) நாக சைதன்யாவின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார் சமந்தா. தனது கணவருக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக முத்தப் பரிசு வழங்கிய சமந்தா, அது தொடர்பான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மங்கலாக அமைந்திருக்கும் அந்த புகைப்படத்தோடு, “என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு” என்ற அன்பான வார்த்தைகளினால் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.