மைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்மீது வீண்பழி சுமத்தினால் யார் எப்போது எப்படியான அழுத்தங்களை எங்கள் மீது பிரயோகித்தார்கள் என்பதை நானும் பகிரங்கமாக சொல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க எச்சரித்துள்ளார்.


ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது, தொடரும் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நான் இதுவரை பகிரங்கமாக எந்த குற்றச்சாட்டையும் முன் வைத்ததில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வா அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் ஜனாதிபதி உத்தரவிட்ட விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜத் ஜயசுந்தர, பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் அடிப்படையில் இடமாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே ஜனாதிபதி இவ்வாறு பல்வேறு விடயங்களில் தலையீடு செய்து வந்தார், ஜனாதிபதிக்கு இவ்வாறு தலையீடு செய்வது வாடிக்கையாகவே அமைந்திருந்தது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.