பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்.

தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள் .
இந்த நாள் புனிதர்களுடைய நாள். தமக்கென வாழாது பிறரின் நன்மைக்காக நமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தேசிய இனம் தனது
தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது உயிரைதுச்சமென மதித்து தமது உயிரை தமிழ்   இனத்திற்காக ஆகுதியாக்கிய  நாள் நவம்பர் 27.

மாவீரர்களின் தியாகம் அழியாது, மறையாது, அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் தமிழ் சமூகம் உள்ளது. அதனடிப்படையில் பிரித்தானியாவில் மாவீரர் வாரத்தில் " மாவீரர்களை நினைவு கூர்ந்து குருதிக் கொடை"  என்ற எண்ணக்கருவில் குருதிக்கொடை   நிகழ்வானது வருடாவருடம் நடைபெற்று வருகின்றது ,  அந்த வகையில் கடந்த 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.


குறித்த நிகழ்வானது காலை 10:00 மணிமுதல் மாலை 5 மணிவரை Tooting Blood Donor Centre, எனும் இடத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில்  ஏராளமான தேசிய செயற்பாட்டாளர்களும் இக் குருதித்தான நிகழ்வில்  இணைத்துக் கொண்டு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.