இனப்பாகுபாட்டை காண்பித்த சொகுசு விடுதி உரிமையாளருக்கு பாரிய அபராதம்!

கனடா நாட்டின் வெள்ளை இனத்தைச் சேர்ந்த சொகுசு விடுதி ஊழியர்கள் 7 பேருக்கு எதிராக பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக அந்த நாட்டின் மனித உரிமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.


பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அந்த தீர்ப்பாயம், ஊழியர்களுக்கு 173,000 கனேடிய டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் வெள்ளை இன ஊழியர்களை நீக்கிவிட்டு சீன நாட்டை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். சீனர்கள் குறைவான ஊதியம் பெறுவார்கள் என்பதால் அவர்களை பணிக்கு அமர்த்தியதாக அதன் உரிமையாளர் கின் வா சான் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த விடுதியின் ஏழு வெள்ளையின ஊழியர்கள் அகற்றப்பட்டு, சீன ஊழியர்கள் அமர்த்தப்பட்டனர்.

இனத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
Powered by Blogger.