அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம்

அமெரிக்க, சீன அதிபர்கள் இருதரப்பு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம் தெரிவித்துள்ளனர்.


சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் (Xi Jinping) தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தங்களது உரையாடல் சுமுகமாக இருந்ததாக Twitterஇல் பதிவிட்டார்.

இம்மாத இறுதியில் அர்ஜெண்டினாவில் நடைபெறும் G20 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாட்டிற்கிடையே சந்திப்பது குறித்து இருவரும் திட்டமிட்டதாகத் திரு. டிரம்ப் கூறினார்.

இருதரப்பு வர்த்தகப் பதற்றத்தால், தொழிற்துறை பாதிக்கப்படுவதை அதிபர் ஸி விரும்பவில்லை என்று சீன அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம், அதன் தைவானியப் பங்காளித்துவ நிறுவனம், சில தனிநபர்கள் ஆகிய தரப்புகள், அமெரிக்காவின் Micron Technology நிறுவனத்தின் வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.