தைவானில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு,காரணம் என்ன?

தைவானில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு, வடிவமைப்புக் குறைபாடு காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த விபத்தில் 18 பேர் மாண்டனர்.

ஜப்பானின் Nippon Sharyo நிறுவனம் அந்த ரயிலை உற்பத்தி செய்தது.

ரயிலின் மின்கம்பி வரைபடத்தில் அந்தக் குறைபாடு தென்பட்டதாக நிறுவனம் Reuters-இடம் தெரிவித்தது.

அந்தக் குறைபாட்டால், ரயிலின் தானியக்கப் பாதுகாப்பு அம்சம் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

அதன் காரணமாக மத்தியக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு எச்சரிக்கை விடுக்க தானியக்கப் பாதுகாப்பு அம்சம் தவறியிருக்கலாம்.   
Powered by Blogger.