வாக்குறுதிகளில் இருந்து இலங்கை பின்வாங்கினால், GSPபிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார்.


ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“..மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை பின்வாங்கினால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும். இலங்கை அரசாங்கம் சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே, ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றதாகவும் இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால், தாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.