சட்டத்திற்கு முரனாக நியமிக்கப்பட்ட பிரதமர்–சம்பந்தன்!

சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் அதியுயர்தன்மையை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயமாகும்.

பழைய பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை அரசியல் அமைப்புக்கு முரணான செயல். சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பு முறையாக பேணபடவேண்டியது அவசியமாகும். ஆகவே நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெறவேண்டியது முக்கியம்“ என தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.