பயம் காட்டத் தயங்காத ராய் லட்சுமி!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நாயகிகள் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால் ஹாரர் த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அம்மன் வகைப் படங்களின் வருகை முற்றிலும் குறைந்துபோன நிலையில் ஹாரர் படங்களின் எண்ணிக்கை

அதிகரித்துள்ளது. தொடர்ந்து இத்தகைய படங்களில் நடிக்கும் ராய் லட்சுமி அடுத்த படத்திலும் இதே பாணியையே தேர்வு செய்துள்ளார்.

காஞ்சனா, அரண்மனை ஆகிய ஹாரர் படங்களில் நடித்த ராய் லட்சுமி தற்போது நாகங்களை மையமாகக் கொண்டு நீயா 2 படத்தில் நடித்துவருகிறார். கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

ராய் லட்சுமி தற்போது தான் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் விணு வெங்கடேஷ் இயக்கத்தில் ஹாரர் பாணியில் உருவாகும் சின்ரல்லா என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். அஸ்வமித்ரா இசையமைக்கும் இந்த படத்துக்கு கிஷோர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இது மட்டுமல்லாமல் நவம்பர் மாதம் மகிழ்ச்சிகரமான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். இது தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 

No comments

Powered by Blogger.