அன்புப் புலத்தில் பாபா!

சாய்பாபாவை நீங்கள் காலை சென்று பிராத்தனை செய்றீங்கள், மாலை சென்று பிராத்தனை செய்றீங்கள். இரவு சேவிக்கிறீர்கள். அவருக்கு அதிகாலை பூ

வைக்கிறீர்கள், மதிய ஆர்த்தியில் மனம் உருகுகிறீர்கள். அவர் ஆலயத்துக்கு அனுபொழுதும் சென்று மனிதப் பிறவியைக் கடக்க அனிச்சமாய் பக்திப் பாடு
செய்கிறீர்கள்.
நீங்கள் சாய்பாபா சன்னிதிக்குச் செல்வதை பாபா அறிவார். அவர் உங்களைத் தேடி வருவதை நீங்கள் அறிவீரா?

“பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்து அதை மட்டுமே உண்பார். அதைக் கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ். கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள்.
ஒருமுறை பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறிது காலம் இவ்வாறே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை.
மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி அளித்தார். அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வாசனையால் தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது.
பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும் பண்டங்களை அது தூய்மைகெடச் செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் எறிந்தாள். அது பயந்துபோய் ஓடிவிட்டது.
பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவளை ஏசினார்கள். ‘’பாபாவை வணங்குகிறேன் என்கிறாயே... ஒரு உயிரை எப்படி மதிக்க வேணும் என்பது கூட உனக்குத் தெரியவில்லையா? அந்த நாய் தன் பசிக்காகத்தானே உன்னைத் தேடி வந்தது. நீயோ அதன் மேல் தீயை அள்ளி வீசுகிறாயே?” என்று கோபித்துக் கொண்டனர்.
அன்றும் கூட பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன், பாபா" நான் உன் வீட்டிற்கு வந்தேன். நீ கடுமையான கோபத்தில் இருந்தாய். நான் திரும்ப வந்துவிட்டேன்” என்றார்.
அந்த பக்தை அதிர்ந்துவிட்டாள். “சுவாமி எப்போது வந்தீர்கள்? நீங்கள் வருவீர்கள் என்றுதானே கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தேன்” என்று பரவசமாகக் கேட்டாள்.
அதற்கு பாபா, “நான் வந்தேன். நீதான் எரியும் விறகுக் கட்டையை என் மேல் வீசி எறிந்து அனுப்பிவிட்டாய்” என்றார் சிரித்துக் கொண்டே.
அந்த பக்தைக்கு பகீர் என்றிருந்தது. மனிதர்களிடத்திலும், விலங்குகளிடத்திலும் பரிவு காட்டாத இடத்தில் பாபா இருக்க மாட்டார் என்பதுதான் சங்கதி!
புரிந்து நடப்போம். அன்பை விதைப்போம்... அன்பை வளர்ப்போம்!
பாபா பரவசம் தொடரும்
SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
akkaraipattishirdibaba@gmail.com
http://akkaraipattisaibaba.com/

No comments

Powered by Blogger.