அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி !

தேசிய அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இரட்டைவேடமிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இந்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நடவடிக்கை மற்றொரு அதிரடியான சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் இரட்டைவேடமான செயற்பாடாகும்.

அது நடந்தால், இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வரும் ஒரே சாதகமான நடவடிக்கை இதுதான்” என கூறினார். 

No comments

Powered by Blogger.