வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடு

இலங்கை தமிழரசுக் கட்சியின் வழிகாட்டலில் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளன.


குறித்த நிகழ்வு இன்று காலை நகரசபை பழைய மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில்இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.